Home நாடு புதிய கெடா சுல்தானாக ராஜா மூடா தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்!

புதிய கெடா சுல்தானாக ராஜா மூடா தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்!

915
0
SHARE
Ad

RajaMudaproclaimedasnewSultanofKedahஅலோர் ஸ்டார் – கெடா மாநிலத்தின் ராஜா மூடா துங்கு சலாகுதின் அல்மாரும் சுல்தான் பட்லிஷா, இன்று செவ்வாய்க்கிழமை தன்னைப் புதிய கெடா சுல்தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

நேற்று திங்கட்கிழமை அவரது மூத்த சகோதரரான சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா இயற்கை எய்தியதையடுத்து, துங்கு சலாகுதின் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

29-வது கெடா சுல்தானாக துங்கு சலாகுதின் அரியணை ஏறும் அறிவிப்பை கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா முகமது ஹனிபா, இஸ்தானா அனாக் புக்கிட்டின் அரச கவுன்சில் உத்தரவின் படி வாசித்தார்.

#TamilSchoolmychoice