கொழும்பு – கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தனது முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்காவும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் அனுஷா பால்பிட்டாவும், தான் கூறியதன் பேரில் தான் புத்த தேவாலயங்களில் உள்ள பக்தர்களுக்கு ‘சில்’ எனப்படும் துணிகள் கொடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதற்காக அனுஷா பால்பிட்டா, அரச நிதியிலிருந்து 650 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டப்பட்டது.
கடந்த வாரம் அக்குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையின் முடிவில், அனுஷா பால்பிட்டாவும், லலித் வீரதுங்காவும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த ராஜபக்சேவை எதிர்த்துக் எதிர்கட்சியில் களமிறங்கிய சிறிசேனா, அத்தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.