Home நாடு மகாதீர்: முகமட் தாயிப் அம்னோவுக்குத் திரும்புவதில் என்ன சிறப்பு?

மகாதீர்: முகமட் தாயிப் அம்னோவுக்குத் திரும்புவதில் என்ன சிறப்பு?

864
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

அம்னோவினர் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்வு குறித்து பெர்சாத்து கட்சியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமது காணொளி வடிவில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“மாட் தாயிப்பின் வருகையை மிகப் பெரிய மற்றும் சிறப்பான நிகழ்வைப் போல், நஜிப்பும், சாஹிட்டும் நினைத்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பை ஏன் கூட்ட வேண்டும்?”

“ஆம்.. அது உண்மை தான்.. தங்களது கும்பல் மீண்டும் சேர்ந்துவிட்டதாக டத்தோஸ்ரீ நஜிப் நினைக்கிறார். அது அவரது கும்பல்” என்று மகாதீர் கூறியிருக்கிறார்.

மேலும், முகமட் தாயிப், அம்னோவிற்கே தாவிவிட்டது, தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.