Home நாடு அக்டோபர் முதல் டாருல் குரான் சமயப்பள்ளி மீண்டும் தொடக்கம்!

அக்டோபர் முதல் டாருல் குரான் சமயப்பள்ளி மீண்டும் தொடக்கம்!

816
0
SHARE
Ad

school-islam-fire-14092017கோலாலம்பூர் – கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, தீயில் சேதமடைந்த ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் டாருல் குரான் சமயப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், வரும் அக்டோபர் மாதம் முதல், வேறு ஒரு தற்காலிகக் கட்டிடத்தில் மீண்டும் கல்வியைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து அப்பள்ளியின் நிர்வாகி முகமது சாஹிட் மாஹ்முத் கூறுகையில், தற்காலிகப் பள்ளியின் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

“தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு புதிய கட்டிடத்திற்குச் செல்வோம். அந்தக் கட்டிடம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே அங்கு பணிகளைத் தொடங்குவோம். எல்லாப்  பணிகளும் நிறைவு பெற்ற பிறகே மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்கு வருவார்கள்” என இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முகமது சாஹிட் மாஹ்முத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தீ சம்பவத்தில், 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகிவிட்டதால், தற்போது 18 மாணவர்களைக் கொண்டே பள்ளியை நடத்தப் போவதாகவும் முகமது சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்தத் தீ சம்பவத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் விஷமத்தனம் தான் காரணம் என்பதை விசாரணையில் கண்டறிந்திருக்கும் காவல்துறை, அப்பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்களைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றது.