Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: சந்தேக நபர்கள் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டு!

சமயப்பள்ளி தீ விபத்து: சந்தேக நபர்கள் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டு!

952
0
SHARE
Ad

Tahfiz fireகோலாலம்பூர் – கம்போங் டத்தோ கெராமட் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில், தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் மீது நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவிருக்கிறது.

மாநகரக் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ அமர் சிங் இவ்வழக்கின் விசாரணை அறிக்கை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மன்றம் விடுத்த உத்தரவின் படி, சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“சந்தேக நபர்களில் இருவர் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ், கொலைக்குற்றம் சாட்டப்படவிருக்கிறது”

“மேலும் 6 பேர் மீது அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952, பிரிவு 15 (1)-ன் கீழ் குற்றம் சாட்டப்படவிருக்கிறது” என காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.