Home நாடு சமயப்பள்ளி தீவிபத்து: மாணவருக்கு தோல் அறுவை சிகிச்சை வெற்றி!

சமயப்பள்ளி தீவிபத்து: மாணவருக்கு தோல் அறுவை சிகிச்சை வெற்றி!

850
0
SHARE
Ad

school-islam-fire-14092017கோலாலம்பூர் – கடந்த வாரம் வியாழக்கிழமை ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள டாருல் குரான் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மரணமடைந்தனர்.

மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில், உயிர்பிழைத்த மாணவர்களின் ஒருவரான சுனுன் மிஸ்ரிக்கு (வயது 15) இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீயில் கருகியிருந்த தோல் நீக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது அவர் நன்றாக சாப்பிட, பேச முடிகின்றது என்றும், என்றாலும் இன்னும் செயற்கை சுவாசக் கருவியுடன் தான் இருக்கிறார் என்றும் அவரது தந்தை கூறியிருக்கிறார்.