Home நாடு நைசாகப் பேசி 6 லட்சம் ரிங்கிட் திருடிச் சென்ற மர்ம நபர்!

நைசாகப் பேசி 6 லட்சம் ரிங்கிட் திருடிச் சென்ற மர்ம நபர்!

1152
0
SHARE
Ad

Damansarabanktheftகோலாலம்பூர் – டாமன்சாரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், தீயணைப்புக் கருவிகள் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதாகக் கூறிவிட்டு நுழைந்த மர்ம நபர், வங்கியில் இருந்த 600,000 ரிங்கிட்டை திருடிச் சென்றுவிட்டதாக பிரிக்பீல்ட்ஸ் காவல்துறை கூறுகின்றது.

இது குறித்து பிரிக்பீட்ல்ஸ் ஓசிபிடி துணை ஆணையர் ருஸ்லான் காலிட் கூறுகையில், வங்கியில் இருந்த இரகசியக் கேமராவை ஆய்வு செய்திருப்பதோடு, வங்கி ஊழியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.

“கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, மதியம் 12.30 மணியளவில், சம்பந்தப்பட்ட வங்கியில் தீயணைப்புக் கருவிகளை சரி செய்வதாகக் கூறி அந்நபர் வங்கி நிர்வாகியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.”

#TamilSchoolmychoice

“அப்போது அந்நபரின் அடையாள அட்டையைக் காட்டச் சொன்ன வங்கி மேலாளர், அதை அவர் காட்ட மறுக்கவே, அவருக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

“என்றாலும், மேலாளர் மதிய உணவிற்காகச் சென்றவுடன், வங்கி ஊழியர்களிடம் சமயோஜிதமாகப் பேசிய அந்நபர், வங்கியில் இருந்த 600,000 ரிங்கிட்டை திருடிச் சென்றிருக்கிறார்” என்று ருஸ்லான் கூறியிருக்கிறார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி துணைக் கண்காணிப்பாளர் முகமது ஹபிசி இஷாக்கிடம் தெரிவிக்க 017-2336343 என்ற எண்ணையோ அல்லது பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைமையகம் 03-90516222 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்திருக்கின்றது.