நேபிதாவ் – மியன்மாரில் ராக்கின் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சு கி, அதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி, ரோஹின்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் மீது மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதலையடுத்து, சுமார் 410,000 ரோஹின்யா மக்கள், அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சமடைந்தனர்.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு மியன்மார் தலைவர் ஆங் சாங் சு கி வாய் திறக்கவில்லை என்று உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று தான் ஆங் சாங் சு கி முதன் முதலாக வாய் திறந்து பேசியிருக்கிறார்.
“மனித உரிமை மீறல்களுக்கும், சட்டவிரோத வன்முறைக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். நாட்டில் அமைதியையும், நிலைப்புத் தன்மையையும் நிலைநாட்ட நாங்கள் உறுதியெடுத்திருக்கிறோம்” என்று நேபிதாவில் இன்று ஆங் சாங் சு கி அறிவித்தார்.