ஜகார்த்தா – மவுண்ட் அகுங் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து அதன் குழம்புகள் தீவு எங்கிலும் பாயலாம் என்பதால், பாலி தீவு முழுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனிசியாவில் தேசியப் பேரிடர் பாதுகாப்பு முகமை, மௌண்ட் அகுங் எரிமலை உள்ள பகுதியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், வடக்கு, தென்கிழக்கு, தெற்கு – தென்மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 7.5 கிலோமீட்டர் தொலைவிலும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனத் தடை விதித்திருக்கிறது.
மௌண்ட் அகுங் அமைந்திருக்கும் காராங்காசெம் பகுதியைச் சுற்றிலும் சுமார் 840 சதுரக் கிலோமீட்டர் தொலைவில் சுமார் 408,000 பேர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.