Home இந்தியா சசிகலாவை அம்பலப்படுத்திய டிஜஜி ரூபாவுக்குப் பதக்கம்!

சசிகலாவை அம்பலப்படுத்திய டிஜஜி ரூபாவுக்குப் பதக்கம்!

1083
0
SHARE
Ad

DIGRoopaபெங்களூர் – சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, அங்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சசிகலா குறித்து காணொளி ஆதாரங்களுடன் ரூபா அம்பலப்படுத்திய சில நாட்களிலேயே சிறை இலாகாவில் இருந்து போக்குவரத்து இலாகாவிற்கு ரூபா இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ரூபாவின் இந்த துணிச்சலான நடவடிக்கையைக் கௌரவிக்கும் வகையில், கடந்த சனிக்கிழமை கர்நாடக மாநில அரசு, இந்த பதக்கத்தை வழங்கியது.

#TamilSchoolmychoice

கர்நாடக முதல்வர் சித்தராமையா அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா இந்தப் பதக்கத்தை ரூபாவுக்கு வழங்கினார்.