இதனிடையே, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக செப்டம்பர் 22-ம் தேதி, சிறப்புக் காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் மேற்கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்க்கும் படியான விறுவிறுப்பான திரைப்படமாக ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ உருவாகியிருக்கிறது.
சிங்கப்பூர் சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, வெள்ளிக்கிழமை கார்னிவல் சினிமா (ஷா டவர்ஸ்@பீச் ரோடு) என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் சிறப்புக் காட்சி டிக்கெட் முன்பதிவு செய்ய பிரியா – 97808124 என்பவரைத் தொடர்பு கொள்க.