Home கலை உலகம் “அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர்..” – கமல் அதிர்ச்சித் தகவல்!

“அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர்..” – கமல் அதிர்ச்சித் தகவல்!

781
0
SHARE
Ad

kamalசென்னை – அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர் திரைப்படங்களில் தன்னை பார்க்க மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது என நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

தான் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்ட பிறகு, சினிமாவில் எதற்கு நடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் கமல், மக்களுக்கு சேவையாற்றுவதில் முழு கவனமும் செலுத்துவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

தான் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தில் வரும் உதயமூர்த்தி கதாப்பாத்திரம் போல் தான் நிஜ வாழ்விலும் மக்களுக்கு முழு மூச்சாகச் சேவையாற்றுவேன் என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.