Home நாடு ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!

ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!

973
0
SHARE
Ad

pakatan-harapan-johor-29092017ஜோகூர் பாரு- நாடு முழுமையிலும் துன் மகாதீர் தலைமையில் விரிவடைந்து கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் தோற்றுவிக்கப்பட்டது.

ஜோகூர் தம்போய் நகரில் பக்காத்தான் ஹரப்பானின் இந்த தொடக்க விழா நடைபெற்றது.

ஜோகூர் மாநிலத்தின் பக்காத்தான் ஹரப்பான் தலைவராக பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நேற்றைய தொடக்க விழாவில் துன் மகாதீர் தம்பதிகளோடு, ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் கலந்து கொண்டார்.

அடுத்து வரும் 14-வது பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தைத் தனது முன்னணி மாநிலமாக முன்னிறுத்தி பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

மொகிதின் யாசின் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டதால் ஜோகூர் மாநிலத்தில் நிலவும் அதிருப்தி, சில மேம்பாடுகளால் மக்களிடையே காணப்படும் எதிர்ப்புகள், என பல்வேறு காரணங்களால் ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருவதாகக் கருதப்படுகிறது.

அம்னோ கட்சி ஜோகூர் மாநிலத்தில்தான் தோற்றம் கண்டது என்பது வரலாறு. முதன் முறையாக ஜோகூர் மாநிலத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 15 தொகுதிகளை வெல்வதற்கு எதிர்க்கட்சிகள் நோக்கம் கொண்டிருக்கின்றன.

ஜோகூரில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் தற்போது 19 சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சிகள் தங்கள் வசம் கொண்டிருக்கின்றன. ஆட்சி அமைக்க 28 சட்டமன்றத் தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தம் 29 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற பக்காத்தான் ஹரப்பான் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இதற்கு மொகிதின் யாசினின் தலைமைத்துவம் பெரும் பங்காற்றும் என்றும் மகாதீரின் பிரச்சாரங்கள் மேலும் கூடுதலாக உதவும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.