இந்நிலையில், அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்காமல் இருப்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ்ராஜ், “கௌரியைக் கொலை செய்தவர்கள் இன்னும் பிடிபடவில்லை. ஆனால் அவரது இறப்பை ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். நமது பிரதமர் பின்பற்றி வருபவர்களின் பட்டியலில் அவர்களும் இருக்கின்றனர். நானே சிறந்த நடிகர். நீங்கள் (மோடி) நடித்தால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?” என்று பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.
Comments