Home உலகம் லாஸ் வெகாஸ் சம்பவம்: இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!

லாஸ் வெகாஸ் சம்பவம்: இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!

971
0
SHARE
Ad

lasvegasshooterலாஸ் வேகாஸ் – அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இசைத்திருவிழா ஒன்றில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான துப்பாக்கிச் சூடாக இது கருதப்படுகின்றது.

இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலை நடத்தியவன் 64 வயதான ஸ்டீபன் பாடோக் என்பதும், இசைத்திருவிழா நடந்த அரங்கின் அருகே அமைந்திருந்த தங்கும்விடுதி ஒன்றில் 32-வது மாடியில் உள்ள அறை ஒன்றில் இருந்து அவன் இத்தாக்குதலை நடத்தியிருக்கிறான் என்பதும் தெரியவந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், 1,000 அடி தூரத்தில் இருந்து சுடும் அளவிற்கு அவன் பயன்படுத்தியது முற்றிலும் இயந்திரத் துப்பாக்கியாக இருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக தூரத்தில் இருந்து சுடும் அளவிற்கு மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்று அமெரிக்க காவல்துறைக் கண்டறிந்திருக்கிறது.