Home நாடு முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!

முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!

1324
0
SHARE
Ad

Mahathir@DAPofficeகோலாலம்பூர் – 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ஜசெக கட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலாகச் சித்தரித்த மகாதீர், நேற்று திங்கட்கிழமை அதே அலுவலகத்தின் தலைமையகத்தில் கால் பதித்தார்.

வாராந்திர தலைமைத்துவக் கூட்டத்திற்கு இதர பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் மகாதீரும் கலந்து கொண்டு பேசினார்.

மகாதீருக்குப் பின்னால் ராக்கெட் சின்னம் இருக்க, அவரது அருகே பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங்கும் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று ஜசெக ஊடகமான ராக்கெட்கினியில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.