Home உலகம் லாஸ் வெகாஸ்: 59 பேர் மரணம் – 527 பேர் காயம்

லாஸ் வெகாஸ்: 59 பேர் மரணம் – 527 பேர் காயம்

903
0
SHARE
Ad

Las Vegas-shooting-02102017லாஸ் வெகாஸ் – துப்பாக்கிக் கலாச்சாரத்தின் பலனாக அமெரிக்கா எதிர்நோக்கிய மற்றொரு வரலாறு காணாத துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இதுவரையில் 59 பேர் மரணமடைந்துள்ளனர். 527 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

  • இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் அனைத்துலக பயங்கரவாத இயக்கம் எதுவும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
  • அருகில் நடந்து கொண்டிருந்த ஓர் இசை விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
  • இந்த மரணத் தாக்குதலை நடத்தியவன் 64 வயது ஸ்டீபன் பெட்டோக் (Stephen Paddock) என அடையாளம் காணப்பட்டிருக்கிறான். அவன் ஒருவனே மண்டலே பே என்ற உயர்தர நட்சத்திர தங்கும் விடுதியின், 32-வது மாடியில் இருந்த அறையொன்றில் இருந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான்.
  • பின்னர் காவல் துறையினரால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது அறைக்குள் நுழைந்து காவல் துறையினர் சோதனை நடத்தியதில் மேலும் 17 துப்பாக்கிகளை அவன் அந்த அறைக்குள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
  • அந்த அறையில் அவன் மூன்று நாட்களாகத் தங்கியிருந்திருக்கிறான். ஆயிரக்கணக்கான சுற்று துப்பாக்கிக் குண்டுகளையும் காவல் துறையினர் அந்த அறையில் கண்டெடுத்திருக்கின்றனர்.
  • அவனது அறையை சுத்தம் செய்த தங்கும் விடுதியின் பணியாளர்கள் அந்த அறையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதையும் தாங்கள் பார்க்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். இதிலிருந்து அவன் துப்பாக்கிகளை கவனமான மறைத்து வைத்திருக்கிறான்.
  • அவனது இல்லம் முற்றுகையிடப்பட்டு, சோதிக்கப்பட்டதில், இதுவரையில் அங்கு மேலும் 18-க்கும் கூடுதலான விதம் விதமான துப்பாக்கிகளும், துப்பாக்கிக் குண்டுகளும், வெடிகுண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
  • மலேசிய நேரம் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி நிலவரப்படி, அவனது வீட்டைச் சுற்றி வளைத்துள்ள அதிரடிக் காவல் படையினர், அங்கு அதிரடியாக நுழைவதற்கு காத்திருக்கின்றனர்.
  • தாக்குதல் நடத்தியவன் மோசமான குடும்பப் பின்னணியைக் கொண்டவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனது தந்தை அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்ட மிகப் பயங்கரமான 10 குற்றவாளிகளில் ஒருவர். 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார்.
  • இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை புதன்கிழமை லாஸ் வெகாஸ் நகருக்கு நேரில் வருகை தந்து நிலைமையைக் கண்டறிவார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.