Home கலை உலகம் அஸ்ட்ரோ: “பெட்டிக்குள்ள என்ன” – “எனக்கே வா” தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

அஸ்ட்ரோ: “பெட்டிக்குள்ள என்ன” – “எனக்கே வா” தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

853
0
SHARE
Ad

astro-deepavali-15102017-bannerகோலாலம்பூர் – எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளியேற்றவிருக்கும் அஸ்ட்ரோ, தனது துல்லிய ஒளிபரப்பான விண்மீன் எச்.டி. அலைவரிசையிலும் பல அதிரடியான சிறப்பு நிகழ்ச்சிகளை படைக்கவிருக்கிறது.

அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் வலம் வருகின்றது.

தீபாவளியை முன்னிட்டு ‘எனக்கே வா’ மற்றும் ‘பெட்டிக்குள்ள என்ன’ தொடரின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன. ஸ்ரீ சோனிக் தொகுத்து வழங்கும் இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தீபாவளியை முன்னிட்டு பல உள்ளூர் கலைஞர்கள் பங்கெடுக்கின்றனர். இவர்களின் நகைச்சுவை மிக்க சாகசங்களை காணத் தவறாதீர்கள்!

#TamilSchoolmychoice

18 அக்டோபர் இரவு 7 மணிக்கு ‘பெட்டிக்குள்ள என்ன’ (பாகம் 1) ஒளியேறும்.

தொடர்ந்து 18 அக்டோபர் இரவு 9 மணிக்கு ‘எனக்கே வா (பாகம் 1)’ ஒளியேறும்.

19 அக்டோபர் இரவு 7 மணிக்கு பெட்டிக்குள்ள என்ன (பாகம் 2) ஒளியேறும்.

19 அக்டோபர் இரவு 9 மணிக்கு எனக்கே வா (பாகம் 2) ஒளியேறும்.

இவை யாவும் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் மட்டுமே…

Print