Home வணிகம்/தொழில் நுட்பம் டோனி பெர்னாண்டஸ், கொரிய அழகியை மணந்தார்!

டோனி பெர்னாண்டஸ், கொரிய அழகியை மணந்தார்!

1259
0
SHARE
Ad

tony_fernandes-chloe-wed-featureபிரெஞ்ச் ரிவெரா (பிரான்ஸ்) – ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும், மலேசியக் கோடீஸ்வரர்களில் ஒருவரான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், 30-ஐத் தாண்டிய வயது கொண்ட குலோ (Chloe) என்ற கொரிய நடிகை ஒருவரைத் திருமணம் புரிந்து கொண்டார்.

53 வயதான பெர்னாண்டசின் இந்தத் திருமணம் பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையோர நகர் ஒன்றில் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. கொரிய அழகியான குளோவுடன் பெர்னாண்டஸ் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படங்கள், நட்பு ஊடகங்களில் விரைவாகப் பரவி வருகின்றன.

tony_fernandes-chloe-wedding-ஏற்கனவே திருமணமானவரான பெர்னாண்டசுக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெர்னாண்டசுக்கு மிக நெருக்கமான நட்பு வட்டாரங்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பெர்னாண்டசின் மாப்பிள்ளைத் தோழனாக பிரதமர் நஜிப்பின் சகோதரரும், சிஐஎம்பி வங்கியின் தலைவருமான நசிர் ரசாக் இந்தத் திருமணத்தில் பங்கு கொண்டார்.

பெர்னாண்டசின் வணிகப் பங்குதாரரான டத்தோ கமாருடின் மெரானுன், முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம், முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிசா அசிஸ் ஆகியோர் பெர்னாண்டசின் திருமண விருந்தில் கலந்து கொண்ட பிரமுகர்களாவர்.

Print