Home கலை உலகம் வறுமைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய அஸ்ட்ரோ!

வறுமைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய அஸ்ட்ரோ!

992
0
SHARE
Ad

astro-viluthugal-team-deepavali-2017பணக் கஷ்டம், மனக் கஷ்டம், நோய் என பலருக்கு இன்னும் கஷ்டமே வாழ்க்கையாக அமைகின்றது. குறிப்பாக பெருநாள் காலங்களில் மற்றவர்களைப் போன்று நாமும் கொண்டாட வேண்டும் என வறுமையில் வாழும் எத்தனையோ குடும்பங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருகின்றார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்மையில் விழுதுகள் அறிவிப்பாளர்கள் மலாக்காவில் அமைந்துள்ள திரு. பெரியாய குடும்பத்தை நேரில் சந்தித்து உதவினார்கள்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணத்தால் திரு. பெரியாயரின் உடல் பக்கவாதத்தால் முடங்கிவிட்டது. இவரின் மனைவி திருமத சாந்தியின் வருமானத்தை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகின்றார். இக்குடும்பத்தில் வறுமை மட்டுமின்றி, குழந்தைகளின் ஆரோக்கியமும் மன வருத்தத்தை அளிக்கின்றது.

#TamilSchoolmychoice

ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் எளிய முறையில் இவர்களும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் விழுதுகள் அறிவிப்பாளர்கள் கபிலன், அகல்யா, ரேவதி, குணசீலன், ஸ்ரீகுமரன் மற்றும் செல்வ குமாரி திரு.பெரியாய குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினார்கள்.

அந்த சிறப்புக் காணொளியை தீபாவளியன்று காலை 9.30 முதல் காலை 11.00 வரை அஸ்ட்ரோ வானவில் மற்றும் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி.யில் இடம்பெறும் விழுதுகள் நிகழ்ச்சியில் காணத் தவறாதீர்கள்.

SideBanner-Astro