Home நாடு ‘ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரத்திற்கு அளிப்பது போன்றது’

‘ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரத்திற்கு அளிப்பது போன்றது’

946
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – பாஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் போன்றது என பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறிய கருத்துக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது குறித்து மலாய் நாளேடு ஒன்றிற்கு ஹாடி அளித்திருக்கும் பேட்டியில், ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரச் செயல்களுக்கு அளிக்கும் வாக்கு போன்றது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“மகாதிர் மனந்திருந்த வேண்டும், ஏனென்றால் தேசிய அமைப்புகளில் அவர் ஏற்படுத்திய சிதைவு, மலாய்-முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாட்டைக் குறைத்தது. வளைந்து போன ஜனநாயகத்தைப் பின்பற்றி ஒரு சர்வாதிகாரி போல் நாட்டை ஆளச் செய்தது”

#TamilSchoolmychoice

“அவர் செய்த தவறுகளையெல்லாம் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. உண்மையைச் சொன்னால் அவர் செய்தவைகளை இப்போதும் தற்காக்கிறார். இது எதைக் காட்டுகிறது என்றால், மலேசியாவைக் காப்பாற்றுவதில் அவர் உண்மையாக இல்லை”

“அவருக்கு நஜிப்பை கவிழ்க்க வேண்டும். ஜசெக, பிகேஆர், அமனா அல்லது பெர்சாத்துவுக்கு அளிக்கு வாக்குகள் மகாதீரின் கொடூரச் செயல்களுக்கு அளிக்கும் வாக்குகள் போன்றது தான்” என்று ஹாடி தெரிவித்திருக்கிறார்.