Home கலை உலகம் பஞ்சு சாரின் பெயர் எங்கே? – மெர்சல் குறித்து வெங்கட் பிரபு கருத்து!

பஞ்சு சாரின் பெயர் எங்கே? – மெர்சல் குறித்து வெங்கட் பிரபு கருத்து!

1231
0
SHARE
Ad

vengatprabhuசென்னை – அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் மெர்சல் திரைப்படம் குறித்து நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு கிண்டலாகக் கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

“தளபதி வருகிறார்.. மெர்சல் பண்டிகைக்கேற்ற விருந்து.. அற்புதமாக தழுவி படைத்திருக்கிறார் அட்லீ.. என்ன ஒரு தயாரிப்பு மதிப்பு.. பஞ்சு சாரின் பெயர்?” என்று வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் சூட்சமமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பஞ்சு அருணாச்சலம் அருணாச்சலம் எழுதி, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படமும் தந்தை மற்றும் மகன்கள் என மூன்று ஹீரோ கதை தான். இன்று வரையில் மூன்று ஹீரோ கதை என்றாலே இத்திரைப்படம் தான் உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனவே, வெங்கட் பிரபு அதனைக் குறிப்பிட்டு, சொல்லியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.