Home உலகம் 6000 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: இறந்தவரின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

6000 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: இறந்தவரின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

1097
0
SHARE
Ad

2-ancientskullசிட்னி – 6,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி இறந்த மனிதனின் மண்டை ஓட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

கடந்த 1929 -ம் ஆண்டு, பப்புவா நியூகினியா நாட்டில்   நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, மண்டை ஓடு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதனை வைத்து ஆராய்ச்சி செய்து வந்தனர். அது ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus) என்றழைக்கப்படும் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதனின் மண்டை ஓடு எனக் கருதப்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அண்மையில் ரேடியோகார்பன் முறைப்படி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அது, 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ சாபியென்ஸ் (Homo Sapiens) வகை மனிதனின் மண்டை ஓடு என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.