புதுடெல்லி – தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம், இளைஞர் கும்பல் ஒன்று செல்ஃபி (தம்படம்) எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறது.
குறிப்பாக சுவிஸ் பெண்ணுடன் தம்படம் எடுத்துக் கொள்ள அக்கும்பல் விரும்பியிருக்கிறது. ஆனால் அதற்கு அவரது காதலர் மறுப்பு தெரிவிக்கவே இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில், அக்கும்பல் அவர்களைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியதில் இருவருக்கும் தலையிலும், கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
கடும் காயங்களுடன் அவர்கள் இருவரும் பதேப்பூர் சிக்ரி என்ற இடத்தில் உதவி கேட்டுக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சிலர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உத்திரப்பிரதேச அரசிடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார்.