Home கலை உலகம் ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது: கமல்

ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது: கமல்

906
0
SHARE
Ad

Kamal_1646068gசென்னை – வரும் நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாய் நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதனையடுத்து, அன்று அவர் தனது புதிய கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக ஊடகங்கள் ஆருடம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கமல், “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice