Home இந்தியா நவ.7-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் கமல்!

நவ.7-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் கமல்!

1006
0
SHARE
Ad

kamalhassanசென்னை – வரும் நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாகக் கூறி வந்த கமல், அண்மையில் தான் அரசியலில் இறங்கப் போவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், வரும் நவம்பர் 7-ல் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை கமல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.