சென்னை – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் வாழும் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் ஆகியோர் கடந்த ஓர் ஆண்டாக தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
தமிழ் இருக்கை அமைப்பதற்கு, 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய்.
இந்நிலையில், பலரிடமிருந்து நிதி பெறப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, அந்தப் பத்து கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்ததையடுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகிவிட்டது.