Home நாடு சிலாங்கூர் பத்து தீகா, சுங்கை ராசா சாலைக் கட்டணம் அகற்றப்படுகிறது

சிலாங்கூர் பத்து தீகா, சுங்கை ராசா சாலைக் கட்டணம் அகற்றப்படுகிறது

906
0
SHARE
Ad

Budget2018-03கோலாலம்பூர் – பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் இன்று சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில நெடுஞ்சாலை பகுதிகளில் இடங்களில் டோல் எனப்படும் சாலைக் கட்டணம் அடுத்தாண்டு முதல் அகற்றப்படும் என அறிவித்தார்.

குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தின் பத்து தீகா, சுங்கை ராசா சாலைக் கட்டண சாவடிகள், கெடா புக்கிட் காயு ஈத்தாம் மற்றும் ஜோகூரில் உள்ள இ.டி.எல் (Eastern Dispersal Link) சாலைக் கட்டண சாவடிகளிலும் சாலைக் கட்டணங்கள் அடுத்தாண்டு அகற்றப்படும்.

வரவு செலவுத் திட்டத்தின் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

  • தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு
#TamilSchoolmychoice

budget-2018-tax reductionதனிநபர் செலுத்தும் வருமான வரிக்கான விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரிங்கிட் வரை வருமானம் பெறுபவர்களுக்கான வரி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 35,001 முதல் 70,000 ரிங்கிட் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

  • பிரசவ கால விடுமுறை 90 நாட்கள்

budget-2018-pregnancy leave-bannerபெண் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 90 நாட்களுக்கான பிரசவ கால விடுமுறை இனி தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.