Home நாடு “சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி – சுய காப்புறுதித் திட்டம்” – நஜிப்பின் சுகாதார மேம்பாடுகள்

“சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி – சுய காப்புறுதித் திட்டம்” – நஜிப்பின் சுகாதார மேம்பாடுகள்

837
0
SHARE
Ad

subra-dr-kota kinabalu-queen elizabeth hospitalகோலாலம்பூர் – இன்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சுகாதார அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு இவ்வாண்டு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கு 27 பில்லியன் ஒதுக்கீடு

budget-2018-health ministry-2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 1.5 பில்லியன் அதிகமாகும்.

#TamilSchoolmychoice

“எங்கள் அமைச்சின் வேண்டுகோளை ஏற்று சிறுநீரக சுத்திகரிப்பு நோயாளிகளுக்கான நிதி உதவியைப் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது பல நோயாளிகளின் நிதித் சுமையைக் குறைக்கும்” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

“கோஸ்பென் திட்டம் மூலம் நாங்கள் 40 ஆயிரம் பேருக்கு பயிற்சிகள் தந்திருக்கிறோம். இவர்களுக்கான திட்டத்துக்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுகாதார அமைச்சு மேலும் ஆக்ககரமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். அத்துடன் அபூர்வமாக ஏற்படக் கூடிய நோய்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மக்களுக்குப் பயன்தரக் கூடிய ஒன்று” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

அத்துடன் புதிய சுயகாப்புறுதித் திட்டத்திற்கான அறிவிப்பையும் பிரதமர் அங்கீகரித்து இன்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தனியார் மற்றும் அரசாங்க மருத்துவத் துறைகளின் வசதிகளை இந்தப் புதிய காப்புறுதி திட்டத்தில் பங்கு கொண்டவர்கள் இனி பெற முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மலேசியாவை சுகாதார சேவைகளுக்கான சுற்றுலா மையமாக உருவெடுக்கச் செய்யும் ஊக்குவிப்புகளையும் பிரதமர் நஜிப் அறிவித்திருப்பதால், இனி இந்தத் துறையிலும் சுகாதார அமைச்சின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் டாக்டர் சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தி – நன்றி: www.drsubra.com