கோலாலம்பூர் – கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு ஊக்கத்தொகை இன்று திங்கட்கிழமை வழங்கப்படுகின்றது.
அதற்கான அறிவிப்பை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
“இன்ஷா அல்லா, அரசு ஊழியர்களுக்கான முதல் சிறப்பு ஊக்கத்தொகை 1000 ரிங்கிட்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான 500 ரிங்கிட்டும் 2018 நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல் ஜனவரி 8-ம் தேதியான இன்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்” என நஜிப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.