Home நாடு ‘தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்’ – மலேசியர்களுக்கு நஜிப் அறிவுரை!

‘தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்’ – மலேசியர்களுக்கு நஜிப் அறிவுரை!

1121
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்கத்தின் நம்பிக்கையான திட்டங்களான அமனா டானா அனாக் மலேசியா 2050 அல்லது ஏடம் 50 ஆகியவை, மலேசியர்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் பொருளாதார முதிர்ச்சி வழக்கமாக பிறப்பு விகிதத்தைக் குறைக்கும். மலேசியா அதே சூழ்நிலையை தான் சந்திக்கிறது என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

“எனவே, பிள்ளை பெற்றுக் கொள்ளத் தகுதியான வயதில் இருக்கும் மலேசியர்கள், தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள், அது தான் என்னுடைய அறிவுரை, காரணம், நமக்கு மிகப் பெரிய மக்கள் தொகை தேவைப்படுகின்றது” என இன்று வியாழக்கிழமை தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2018 வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சியில் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice