Home இந்தியா தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இந்தியா, இத்தாலி முடிவு!

தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இந்தியா, இத்தாலி முடிவு!

1118
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி – இந்தியாவும், இத்தாலியும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டிருப்பதோடு, தீவிரவாத்திற்கு எதிராகவும் போராடத் திட்டமிட்டிருக்கிறது.

இது குறித்து இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் பாவ்லோ ஜெண்டிலோனியும் இணைந்து டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, “பிரதமர் ஜென்டிலோனியுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியதில், நாங்கள் இருவருமே ஒன்றை உணர்ந்தோம். இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வோடு செயல்பட்டு புதிய வளர்ச்சியைக் கொண்டு வர இருவருக்குமே விருப்பம் இருக்கின்றது. மேலும், நாங்கள் இருவருமே தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடவும், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காணவும் முடிவெடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice