Home உலகம் சவுதியில் மலேசியப் படைகள் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் : ஹிசாம்

சவுதியில் மலேசியப் படைகள் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் : ஹிசாம்

1392
0
SHARE
Ad

hishamரியாத் – ஏமனில் கிளர்ச்சி ஏற்பட்ட போது, அங்கிருக்கும் மலேசியர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகவும் அனுப்பப்பட்ட மலேசியப் படைகள், தொடர்ந்து அங்கு சேவையாற்றுவார்கள் என தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசைன் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, “ஏமனை சட்டப்பூர்வமாக்கும் கூட்டணி” என்ற மாநாட்டில் பேசிய ஹிசாமுடின், “ஏமனில் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, மலேசியப் படைகளை தொடர்ந்து அங்கேயே மனிதாபிமான உதவிகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் எப்போதும் செய்யத் தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.