Home இந்தியா மின்சாரக் கம்பியை மிதித்து சிறுமிகள் மரணம்: கமல் வருத்தம்

மின்சாரக் கம்பியை மிதித்து சிறுமிகள் மரணம்: கமல் வருத்தம்

711
0
SHARE
Ad

Kamal-Hasanசென்னை – சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதனிடையே, கொடுங்கையூரில் சாலையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பி மீது தெரியாமல் காலை வைத்த இரு சிறுமிகள் (வயது 7) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி செய்வதாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், “கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேணடும்” என்று தெரிவித்திருக்கிறார்.