சென்னை – வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் என கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த சுனாமியால், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனிசியா, ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளின் கடல் எல்லைகளே மாறும் அளவிற்கு அதன் பாதிப்புகள் இருக்கும் என்றும் பாபு கலயில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவரான பாபு கலயில், திருவனந்தபுரத்தில் இதற்கென ஒரு ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகின்றார்.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்படப் போவதை முன்கூட்டியே அறிந்த பாபு கலயில், அப்போதே எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், அப்போது சுனாமி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் இருந்ததால், அவரது பேச்சு அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.