Home 13வது பொதுத் தேர்தல் பினாங்கு மாநில தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் தயார் – டெங்

பினாங்கு மாநில தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் தயார் – டெங்

533
0
SHARE
Ad

Teng Chang Yeowஜார்ஜ் டவுன், மார்ச் 26 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணி கட்சியின் சார்பாக போட்டியிட 40 சதவிகிதம் புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில தேசிய முன்னணி கட்சியின் தலைவர் டெங் சாங் யாவ் தெரிவித்தார்.

எனினும் இந்த புதிய வேட்பாளர் பட்டியல் பிரதமரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் டெங் சாங் யாவ் தெரிவித்தார்.

பினாங்கில் இன்று, ஒரே மலேசியா சிறு வியாபாரிகள் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டெங் சாங் யாவ், “பினாங்கு மாநில தேசிய முன்னணியின் சார்பாக  தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்த 40 சதவிகிதம் புதிய வேட்பாளர்கள் அனைவரும் வருகிற பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் தேசிய முன்னணியுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த புதிய வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.