Home நாடு ஜோங் நம் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரின் உண்மையான பெயர் தெரிந்தது!

ஜோங் நம் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரின் உண்மையான பெயர் தெரிந்தது!

833
0
SHARE
Ad

kimjongnamஷா ஆலம் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது ஷா ஆலம் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இவ்வழக்கில் கொலைக்குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இரு பெண்களான சித்தி ஆயிஷா மற்றும் டான் தி ஹுவாங்கிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இவ்வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 ஆடவர்களின் புனைப்பெயர்கள் மட்டுமே தெரியவந்திருந்த நிலையில், தற்போது அவர்களின் முழுப் பெயரும் கண்டறியப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மிஸ்டர் சாங் என்று அழைக்கப்பட்டவர் ஹாங் சாங் சாக் என்றும், மிஸ்டர் ஒய் என்று அழைக்கப்பட்டவர் ரி ஜி ஹியோன் என்றும், அங்கிள் என்று அழைக்கப்பட்டவர் ரி ஜா நாம் என்றும், மிஸ்டர் ஜேம்ஸ் என்று அழைக்கப்பட்டவர் ஓ ஜோங் கில் என்பது புக்கிட் அம்மான் உளவுத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இவ்வழக்கை விசாரணை செய்து வரும் அதிகாரி அசிருல் இதனை ஷா ஆலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.