Home நாடு அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா

அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா

826
0
SHARE
Ad

Nurul ishaகோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித் தலைவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என சுமார் 150-க்கும் அதிகமானோர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்று கூடினர்.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா அன்வார் ஆகியோருடன், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பிகேஆர் உதவித்தலைவர் தியான் சுவா, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசைய்யா, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்பஸ் ஓமார், ஜசெக தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக், பிபிபிஎம்மின் கைருடின் அபு ஹசான் மற்றும் அமனா தொலைத்தொடர்பு இயக்குநர் காலிட் சமட் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய வான் அசிசா, சிறையில் அன்வார் வலியால் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவரால் எழுதுவதற்கோ, பல்துலக்குவதற்கோ கூட மிகவும் சிரமப்படுவதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரையடுத்து பேசிய நூருல் இசா, “அன்வார் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது. நாங்கள் அவரின் விடுதலை நாளை எண்ணிக் கொண்டிருக்கிறோம். வரும் ஜூன் மாதம் அவரது விடுதலைக்கு முன்னரே அவர் வெளியே வர வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.