Home கலை உலகம் ‘திரையரங்குகள் பற்றி எரியும்’ – ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு எம்எல்ஏ எச்சரிக்கை!

‘திரையரங்குகள் பற்றி எரியும்’ – ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு எம்எல்ஏ எச்சரிக்கை!

1072
0
SHARE
Ad

Raja Singh newஐதராபாத் – சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், , ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பத்மாவதி’ என்ற திரைப்படம், வரலாற்றுச் சம்பவங்களைத் திரித்துச் சொல்லியிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் பாஜக, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தில் ராஜ்புத் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோஷமஹால் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், பத்மாவதி திரைப்படம் இந்துக்களை இழிவுபடுத்துவதைப் போல் அமைந்தால் திரையரங்குகளைக் கொளுத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“பத்மாவதிக்கு எதிராக நாடே கண்டனம் தெரிவித்து வருகின்றது. நாம் ஏன் இன்னும் மௌனமாகவே இருக்கிறோம். நமது இரத்தம் என்ன உறைந்தா போயிவிட்டது?”

“பத்மாவதியில் இந்துக்கள் மோசமாகக் காட்டப்பட்டிருந்தால், திரையரங்குகள் பற்றி எரியும். அவ்வாறு செய்தவர்களை நானே பிணையில் வெளியே எடுப்பேன். இல்லையென்றால் நானே திரையரங்குகளைக் கொளுத்துவேன்” என்று ராஜா சிங் பேசியிருக்கிறார்.