கோலாலம்பூர் – நிகழ்ச்சி ஒன்றிற்கு சற்று தாமதமாக வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ரோஸ்மா, தான் பூப்பந்து விளையாடிவிட்டு வந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதமாகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர், துணையமைச்சர்களின் துணைவியார்களுக்கான நலச்சங்கம், விரைவில் நடத்தவிருக்கும் பூப்பந்துப் போட்டியில் தான் கலந்து கொள்வதாகவும் அதற்காக தினமும் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் ரோஸ்மா தெரிவித்திருக்கிறார்.
தலைவரின் மனைவியான தான், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் இப்பயிற்சியில் ஈடுபடுவதாகவும் ரோஸ்மா தெரிவித்தார்.
“அரைமணி நேரம் தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இன்று காலை நான் பூப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டேன். என்னுடைய வயதில் பூப்பந்து விளையாட்டு என்பது அவ்வளவு இனிமையான ஒன்று அல்ல” என்று ரோஸ்மா நிகழ்ச்சியில் பேசினார்.