Home நாடு நவம்பர் 12-ம் தேதி அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை!

நவம்பர் 12-ம் தேதி அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை!

725
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு விபத்தில் ஏற்பட்ட தோள்பட்டைக் காயம் அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கி வருவதாகவும் அன்வார் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

 

 

 

Comments