Home கலை உலகம் கமலின் உடை குறித்து கஸ்தூரி சர்ச்சை கருத்து!

கமலின் உடை குறித்து கஸ்தூரி சர்ச்சை கருத்து!

989
0
SHARE
Ad

kasthurilargeசென்னை – கமலுடன் ‘இந்தியன்’ திரைப்படத்தில்  இணைந்து நடித்த நடிகை கஸ்தூரி, கமலின் தீவிர ரசிகை. கமலின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில், கமல்  நேற்று நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்தநாளை ரசிகர்கள் முன்னிலையில், அரசியலுக்கான பல அடித்தள அறிவிப்புகளுடன் கொண்டாடினார்.

நேற்று பிறந்தநாள் உடையாக  வட இந்தியாவில் அணியப்படும் டோத்தி உடையை கமல் அணிந்து ரசிகர்கள் முன் தோன்றினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கமல் அணிந்த உடை குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த கஸ்தூரி, கமல் ஏன் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி சடடைக்குப் பதிலாக டோத்தி அணிந்தார்? ஒருவேளை அதில் ஏதாவது தகவல் இருக்கிறதோ? அவர் டெல்லிக்கு குறி வைக்கிறாரோ? என்று கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார்.