Home நாடு ஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி!

ஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி!

956
0
SHARE
Ad

Newgenpartyheadகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமது தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானில், நியூஜென் கட்சி இணைய முயற்சி செய்து வருகின்றது.

இது குறித்த அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

அதில் பேசிய நியூஜென் கட்சியின் தலைவர் ஏ.ராஜரத்னம், “ஹராப்பானுடன் 5-வது கட்சியாக இணைய நியூஜென் கட்சி விரும்புகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக மகாதீரிடம் அறிவிக்கவே இக்கூட்டம்”

#TamilSchoolmychoice

“மேலும், ஏன் ஹராப்பான் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களது நோக்கம் குறித்து நாங்கள் கூறியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, புத்ராஜெயாவில் நேற்று காலை மகாதீருடன் நியூஜென் கட்சி சந்திப்பு நடத்தியது.

ஹராப்பானுக்குச் சாதகமாக இந்திய வாக்குகளில் 15 விழுக்காடுகளை நியூஜென் கட்சிப் பெற்றுத் தரும் என்றும் ஏ.ராஜரத்னம் தெரிவித்திருக்கிறார்.