Home வணிகம்/தொழில் நுட்பம் லோட்டஸ் குழுமத்தின் சுற்றுலா விடுதி திறப்பு விழா கண்டது

லோட்டஸ் குழுமத்தின் சுற்றுலா விடுதி திறப்பு விழா கண்டது

1514
0
SHARE
Ad
lotus-seaview-beach-resort-opening
ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் லோட்டஸ் குழுமத்தின் சீ வியூ பீச் ரிசோர்ட் சுற்றுலா விடுதியைத் திறந்து வைக்கிறார்

ஜோகூர் பாரு – லோட்டஸ் தாமரை குழுமத்தின் இரண்டாவது சுற்றுலா தளமான லோட்டஸ் சீ வியூ பீச் ரிசோர்ட் , ஜோகூர் மாநிலத்தின் பெங்கேராங்கில் திறப்பு விழா கண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி பிற்பகலில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் லோட்டஸ் சிவியு பீச் ரிசோர்ட்டை திறந்து வைத்தார்.

ஏற்கனவே லோட்டஸ் டேசாரு என்ற சுற்றுலா தங்கும் விடுதியை ஜோகூர் மாநிலத்தில் லோட்டஸ் குழுமம் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

Lotus-seaview-beach-resortலோட்டஸ் டேசாரு தங்கும் விடுதியின் அருகிலேயே இந்தப் புதிய சீ வியூ பீச் ரிசோர்ட் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

லோட்டஸ் குழுமம் உணவகம், தங்கும் விடுதிகள், திரை அரங்குகள், திரைப்பட வெளியீடுகள் என பல்வேறு வணிகத் துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது.

Lotus-seaview-beach-resort-opning- (2)Lotus-seaview-beach-resort-opning- (3)Lotus-seaview-beach-resort-opning- (1)