Home One Line P1 லோட்டஸ் குழும தொழிலதிபர் துரைசிங்கத்திற்கு “டான்ஸ்ரீ” விருது

லோட்டஸ் குழும தொழிலதிபர் துரைசிங்கத்திற்கு “டான்ஸ்ரீ” விருது

526
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவரான டத்தோ ரெனா துரைசிங்கத்திற்கு மாமன்னர் உயரிய விருதுகளில் ஒன்றான டான்ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சிறப்பு சடங்கின்போது மாமன்னர் துரைசிங்கத்திற்கு அந்த விருதை வழங்கினார்.

துரைசிங்கத்தின் தலைமையில் இயங்கும் லோட்டஸ் குழுமம் உணவகங்கள், தோட்டத் தொழில், திரைப்படத் திரையரங்குகள், திரைப்பட வெளியீடுகள், தங்கும் விடுதி, சுற்றுலாத் துறை என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது

#TamilSchoolmychoice

பினாங்கைப் பூர்வீகமாகக் கொண்ட துரைசிங்கத்தின் தந்தையார் வள்ளல் ரெங்கசாமிப் பிள்ளையும் மிகப் பெரிய தொழிலதிபராகத் திகழ்ந்தவர். பல்வேறு அறப்பணிகளுக்கு பேருதவி புரிந்தவர். அதன் காரணமாக வள்ளல் என்றே அவர் பரவலாக அறியப்பட்டார்.

அவரது வழியில் துரைசிங்கம் மற்றும் அவரது சகோதரர்களும் இந்திய சமூகத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, டத்தோ விருது பெற்ற துரைசிங்கம் இன்றைக்கு டான்ஸ்ரீ விருது பெறுகிறார்.

மாமன்னரிடமிருந்து இந்த ஆண்டுக்கான விருது பெறும் பட்டியலில் “டான்ஸ்ரீ” விருது பெறும் ஒரே இந்தியர் துரைசிங்கம் ஆவார்.

டான்ஸ்ரீ விருது பெறும் மற்ற பிரமுகர்களில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாமும் ஒருவராவார்.