Home One Line P1 வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது

வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது

507
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனிசியாவிலிருந்து “திடீரென” நோயாளிகள் அம்மாநிலத்திற்கு வருவது குறித்து தனது தரப்புக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பினாங்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தோனிசியாவின் 3 நோயாளிகளை பினாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைப் பெற அனுமதிப்பது தொடர்பான அவசரக் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கியப் பின்னர் முதலமைச்சர் சௌ கோன் இயோ ஓர் அறிக்கையில் இது குறித்து தெரிவித்தார்.

கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து மேலும் தெளிவுப்படுத்தப்பட்டதோடு, சுகாதார சிகிச்சைப் பிரிவின் கீழ் நோயாளிகளை நாட்டிற்கு, குறிப்பாக பினாங்கிற்கு அனுமதிப்பது தொடர்பான் மத்திய அரசின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் தொடர்பான பிரச்சினையும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்தோனிசியாவிலிருந்து பினாங்குக்கு ஆகஸ்ட்-14 ஆம் தேதி 2 புற்றுநோய் நோயாளிகள் மற்றும் உடனடி சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளியின் வருகை குறித்து மாநில அரசுக்கு மேலதிக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பேசிய சௌ, இந்நேரத்தில் பினாங்கில் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு நோயாளிகளை அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ ​​கூடாது என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று கூறினார்.

நோயாளியின் வருகை குறித்து தனது தரப்புக்கு அறிவிக்கப்படாததால் மாநில அரசு மிகுந்த ஏமாற்றத்தை தெரிவிப்பதாக சௌ கூறினார்.