Home One Line P1 லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் ஜூலை 2 முதல் செயல்படும்

லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் ஜூலை 2 முதல் செயல்படும்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் ஜூலை 2 முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு திரையிடலுக்கும் முழு இருக்கைகளிலிருந்து 30 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஆர். துரைசிங்கம் பிள்ளை தெரிவித்தார்.

நாடு முழுவதும் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்த துரைசிங்கம், லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் அரசாங்கம் வகுத்துள்ள கடுமையான நடைமுறைகளை கடைபிடிக்கும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இதன் பொருள் 200 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

“கொவிட் -19 தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கையாண்டமைக்காகவும், திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான சில கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்காகவும் பிரதமர் (டான்ஸ்ரீ மொகிதின் யாசின்) மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு நன்றி.” என்று அவர் கூறினார்.

திரையரங்குகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 1 முதல் செயல்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்னதாக கூறியிருந்தார்.

எதிர்காலத்தில் திரையிடல்களுக்காக குறைந்தது 50- 60 விழுக்காடு மக்களை அனுமதிக்க கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துமாறு துரைசிங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை மத்தியில் பார்வையாளர்கள் ஆங்கில திரைப்படங்களைப் பார்க்க முடியும் என்றும், இந்தியாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தமிழ் படங்கள் தற்போதைக்கு திரையிடப்படாது என்றும், அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.