Home உலகம் ஈராக்-ஈரான் எல்லையில் நிலநடுக்கம்! 67 பேர் மரணம்! 300 பேர் காயம்

ஈராக்-ஈரான் எல்லையில் நிலநடுக்கம்! 67 பேர் மரணம்! 300 பேர் காயம்

1102
0
SHARE
Ad
iraq-quake-Halabja-12112017
மஞ்சள் வண்ணத்தில் வட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து நேற்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது

பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரையில் ஈரான்-ஈராக் இருநாடுகளிலும் 67 பேர் மரணமடைந்ததுடன், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கிய நகர் ஹாலாப்ஜாவில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 61 பேர் மரணமடைந்ததாக ஈரான் தொலைக்காட்சிகள் அறிவித்த வேளையில் ஈராக் பகுதியில் 6 பேர் மரணமடைந்ததாக அந்நாடு அறிவித்தது.

இருநாட்டின் பகுதிகளையும் சேர்ந்த சுமார் 300 பேர் காயமடைந்தனர்.