Home நாடு பக்காத்தான் ஹராப்பான் பதிவில் தாமதம்: புத்ராஜெயா செல்கிறார் மகாதீர்!

பக்காத்தான் ஹராப்பான் பதிவில் தாமதம்: புத்ராஜெயா செல்கிறார் மகாதீர்!

1043
0
SHARE
Ad

MAHATHIR_MOHAMED - 1கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவிற்கு சங்கங்களின் பதிவிலாகா இன்னும் அனுமதியளிக்காமல் இருப்பதுக் குறித்துக் கேள்வி எழுப்ப அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று புதன்கிழமை புத்ராஜெயா செல்கிறார்.

இது குறித்து ஊடகங்களுக்கு மகாதீர் அளித்த தகவலில், “டாக்டர் மகாதீருடன், பக்காத்தான் ஹராப்பானின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் நவம்பர் 15-ம் தேதி கேடிஎன் (உள்துறை அமைச்சு) சென்று கேள்வி எழுப்பவிருக்கிறோம்”

“எல்லா விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. பின் ஏன் இவ்வளவு தாமதம்? 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் சின்னத்தை மக்கள் அடையாளம் காணக்கூடாது என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்களா?” என்று மகாதீர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) என்பது உள்துறை அமைச்சின் கீழ் வரும் ஒரு துறை ஆகும். மலேசியாவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றிற்கு முறையே அதிகாரம் வழங்கும் பொறுப்பை ஆர்.ஓ.எஸ் கொண்டிருக்கிறது.