Home உலகம் இலங்கை ராணுவ படையில் 95 தமிழ் பெண்கள் சேர்ப்பு

இலங்கை ராணுவ படையில் 95 தமிழ் பெண்கள் சேர்ப்பு

706
0
SHARE
Ad

srilangkaகொழும்பு, மார்ச் 26- இலங்கை ராணுவத்தில் பயிற்சி முடித்த 95 தமிழ் பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவத்தில் ஆரம்ப காலத்திலேயே தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டாலும் மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் அவர்கள் இருந்தனர்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக மொத்தமாக 95 தமிழ் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இது பற்றி, ராணுவ பிரிகேடியர் ரத்தினசிங்கம் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

நாட்டின் வட பகுதியில் தமிழ் சமூகத்தினருடன் நெருங்கிய உறவை நிலைநாட்டுவதற்காக பெண் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது பணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் பெண் வீரர்கள் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரம் ராணுவ பயிற்சி பள்ளியில் 4 மாத பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

நாட்டின் வட பகுதியில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு ரத்தினசிங்கம் தெரிவித்தார். இலங்கை ராணுவத்தில் சிங்களர்கள் அதிகமாக இருப்பதால், அதை சிங்கள ராணுவம் என்று சர்வதேச சமுதாயம் அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது தமிழ் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.